News April 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு PM Apprenticeship Mela (PMNAM) நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் இந்த நிகழ்வில், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன. ITI தேர்ச்சி பெற்றவர்களும் NAC சான்றிதழ் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
Similar News
News August 9, 2025
திருவள்ளூர்: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350890>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
திருவள்ளூர்: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
திருவள்ளூர் ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் இன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேலும் குடும்ப அட்டையில் திருத்தங்கள், புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. <<17348875>>தொடர்ச்சி<<>>