News April 2, 2024
படம் பிடிக்காவிட்டால் செருப்பால் அடியுங்கள்

ஹாட்ஸ்பாட் படம் பிடிக்காவிட்டால் மக்கள் என்னை செருப்பால் கூட அடிக்கலாம் என அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என வேதனை தெரிவித்த அவர், மலையாளப் படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தையும் திரையரங்கில் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஹாட்ஸ்பாட் படம் மார்ச் 29-ல் ரிலீசானது.
Similar News
News February 7, 2026
துரோகம் செய்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி: கனிமொழி

யாரோடு இருந்தால் TN பாதுகாப்பாக இருக்கும் என்பது தெளிவாக தெரிவதால் பெண்களும் இளைஞர்களும் திமுகவை ஆதரிக்கிறார்கள் என கனிமொழி பேசியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது ’வெற்றி நமது, வெற்றி நமது’ என சொல்ல தோன்றுகிறது என்றார். மேலும், TN-க்கு துரோகம் செய்த பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியுள்ளதாக அதிமுகவையும் விமர்சித்துள்ளார்.
News February 7, 2026
மன அழுத்தத்தை குறைக்கும் பொழுதுபோக்குகள்!

*ஓவியம் வரைவது, இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்வது மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனை வெளியிட்டு மனதை நிம்மதியடைய செய்யும். *செடி வளர்ப்பில் ஈடுபடுவது, நடைபயிற்சி செய்வது மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. *பழங்கால/பழைய பொருள்களை பழுதுபார்த்து அதன்மீது வண்ணம் தீட்டுவது கவன ஆற்றலை அதிகரிக்கிறது. *பழங்கால முத்திரைகள், நாணயங்கள் சேகரிப்பு மூலம் சுய ஒழுக்கம், பொறுமை வளர்கிறது.
News February 7, 2026
TTV தினகரன், சசிகலா மோதலுக்கு காரணம் என்ன?

சசிகலாவை சந்தித்த அமமுக <<19072313>>மாநில நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி<<>> TTV தினகரன் அறிவித்தார். அதன் பின்னரே, TTV தினகரன், சசிகலா இடையிலான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2017-ல் அமமுகவை தொடங்கிய TTV, சசிகலா குறித்து அதிகம் பேசி வந்தார். ஆனால், 2021-க்கு பிறகு அதனை குறைத்து கொண்டார். 2021 பேரவைத் தேர்தலில் அமமுகவுக்கு பிரசாரம் செய்ய TTV அழைத்தபோது சசிகலா மறுத்ததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.


