News April 4, 2025
கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி பலி

கள்ளக்குறிச்சி, நேற்று காலை திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனூரில் பலத்த மழை பெய்தது. காலை 8:00 மணியளவில் ராதா என்பவரின் வீட்டு தோட்டத்தில் மின்னல் தாக்கியதில்அங்கிருந்த பசுமாடு மற்றும் அதன் கன்று குட்டியும் சுருண்டு விழுந்து இறந்தது. மின்னல் தாக்கி பசு மாடு, கன்று பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(13.8.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.
News August 13, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் பாலசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மாவட்ட நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி மாவட்ட துணை தலைவர்களாக. டாக்டர் வாசுகி .கிருஷ்ணவேணி, பொதுச் செயலாளராக மில்ஹரி அறிவழகன், மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
News August 13, 2025
சுதந்திர தின விழா ஆட்சியர் கொடியேற்ற உள்ளதாக அறிவிப்பு

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று காலை 9.05 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தியாகிகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா அறிவித்துள்ளார்