News April 4, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இலவச நீட் பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச நீட் (NEET) போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏப்.03 முதல் மே.02 வரை புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 9843545343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW! 

Similar News

News September 17, 2025

திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

image

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

image

கூத்தாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறையின் உத்தரவு படி தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காலை வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி தலைமை ஆசிரியர் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் திரும்ப சொல்லி உறுதியேற்றனர்.

News September 17, 2025

திருவாரூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

திருவாரூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த<> இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!