News April 4, 2025

தோட்டத்தில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

image

வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் சின்னகுட்ட மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார் சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் ஏசுதாஸ், மாரிமுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 5, 2026

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6105 ஆகவும் பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20080 ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆக விருதுநகர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News March 4, 2026

விருதுநகர் : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

விருதுநகர் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News March 4, 2026

விருதுநகர்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு; ஒருவர் கைது

image

ஆலங்குளம் செல்லும் சாலையில் உள்ள கிளியம்பட்டி பகுதியில் மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வசித்து வரும் கருப்பசாமி என்பவர் தனது கார் செட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களையும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!