News April 4, 2025
தமிழகம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்

வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக TVK சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
விஜய்க்கு அட்வைஸ் செய்த கமல்ஹாசன்

கூடும் கூட்டம் வாக்காக மாறாது என விஜய் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனத்தையே கமல்ஹாசனும் பிரதிபலித்துள்ளார். விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்றும், தைரியமாக முன்னேறிச் சென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கூடும் கூட்டம் கண்டிப்பாக வாக்காக மாறாது எனக் குறிப்பிட்ட அவர், அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும், எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்றார்.
News September 21, 2025
‘நியோ மிடில் கிளாஸ்’ எழுச்சி!

25 கோடி பேர் வறுமையை வென்றதாக கூறிய PM மோடி, அவர்களை புதிய நடுத்தர வர்க்கம் என்ற அர்த்தத்தில் ‘நியோ மிடில் கிளாஸ்’ என்றார். இவர்கள் தங்களுக்கென லட்சியங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளனர் என்ற அவர், வருமான வரிவிலக்கு வரம்பை ₹12 லட்சமாக உயர்த்தியது, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இதனால் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
News September 21, 2025
வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.