News April 4, 2025
ஒரு நாள் முழுவதும் செம எனர்ஜியா இருக்கணுமா?

ஒரு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட கீழ்காணும் உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இயற்கை சர்க்கரை, கார்போஹைட்ரேட் உடனடி ஆற்றலை கொடுக்கிறது. பாதாமில் உள்ள மெக்னீசியமும் புரதமும் எனர்ஜி பூஸ்டர் என அழைக்கப்படுகிறது. முட்டையில் உள்ள புரதம் தசைகளை வலுப்படுத்தும். பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து உடனடி ஆற்றலைத்தரும்.
Similar News
News April 5, 2025
1 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்ட நாயகன் விருது

MIக்கு எதிரான நேற்றைய போட்டியில், LSG பவுலர் திக்வேஷ் சிங் ரதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்களை வீசி 21 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். குறிப்பாக MI வேகமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்ததை கட்டுப்படுத்தி, 24 பந்துகளுக்கு 46 ரன்கள் என அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நமன் திர்ரை அவர் அவுட்டாக்கினார். இதனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றது.
News April 5, 2025
இந்தியாவில் புதிய சட்டம் அமலானது

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா 2025-க்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தின் படி, ஒருவர் தெரிந்தே போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது, தங்குவது, வெளியேறுவது கண்டறியப்பட்டால் இனி 7 ஆண்டு சிறை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விமானங்கள், கப்பல்கள் வெளிநாட்டு பயணிகளின் தகவல்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
News April 5, 2025
மாதம் ₹8.30 லட்சம் சம்பளம்.. ஆனாலும் புலம்பும் நபர்!

பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மாதம் ₹8.30 லட்சம் சம்பளம் வாங்கியும், செலவுகளுக்கு போதவில்லை என புலம்பி தள்ளுகிறார். வீட்டு வாடகை ₹1.5 லட்சம், கார் EMI ₹80,000, உணவு ஆர்டருக்கு ₹70,000, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட ₹1.2 லட்சம் செலவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், சம்பளத்தை விட ₹57,000 கூடுதலாக, அதாவது மாதம் ₹8.87 லட்சம் தனக்கு செலவாவதாக புலம்பியுள்ளார்.