News April 4, 2025
‘கூலி’ படத்தின் மாஸ் அப்டேட் இன்று

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியா அல்லது டிரெய்லர் குறித்த அப்டேட்டா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எது வந்தாலும் சரி என கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், இசைப்பணிகளும் முடிந்துவிட்டன.
Similar News
News April 12, 2025
8வது தேர்ச்சி… தமிழக அரசில் 392 வேலைவாய்ப்புகள்!

சென்னை ஹைகோர்ட்டில் அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர் உள்பட 392 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு. வயது வரம்பு 18-47 வரை பிரிவிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, திறன் சோதனையின் மூலம் தேர்வு நடைபெறும். சம்பளமாக ₹15,700 – ₹58,100 வரை வழங்கப்படும். முழு தகவலுக்கு <
News April 12, 2025
IPL: குஜராத் அணி முதலில் பேட்டிங்..!

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 6-வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியும் சற்றுநேரத்தில் (பிற்பகல் 3.30 மணி) பலப்பரீட்சை நடத்த உள்ளன. குஜராத் அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வென்றுள்ளது. அதேபோல், 5 போட்டிகளில் விளையாடி லக்னோ அணி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். இன்று வெல்லப் போவது யார்?
News April 12, 2025
ஜம்மு – காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வா, அக்னூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தீவிரவாதிகள் JeM அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சீனாப் பள்ளத்தாக்கில் பதுங்கிருந்தததும் தெரியவந்துள்ளது. மேலும், AK-47, M4 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.