News April 4, 2025
இத பண்ணா… திருப்பதியில் வாழ்நாள் சிறப்பு தரிசனம்!

பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாழ்நாள் முழுக்க சிறப்பு தரிசனம் செய்ய தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினால், வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 4 முறை சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்களாம். ஒவ்வொரு முறையும் வேத ஆசிர்வாதம், 5 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படுமாம். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
Similar News
News April 12, 2025
அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

வருகிற 14ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு ஆகும். இது அரசு விடுமுறை தினமாகும். இதனால் வருகிற 14ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை. தற்போது நடைபெற்றுவரும் பொதுத் தேர்வுகளும் திங்கட்கிழமை நடக்காது.
News April 12, 2025
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே இலக்கு: அண்ணாமலை

2026 தேர்தலில் திமுகவை துடைத்தெறிந்து வீட்டுக்கு அனுப்புவதே இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய பாஜக மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு பாஜகவை நயினார் நாகேந்திரன் வழி நடத்துவார் என குறிப்பிட்டார். அமித்ஷா வருகையால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்து உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
News April 12, 2025
தலித் கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் பா. ரஞ்சித்..!

இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என வரலாற்றில் அறியப்படும் பல்வங்கர் பலூவின் பயோபிக் படத்தை இயக்க பா. ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். A CORNER OF A FOREIGN FIELD என்ற புத்தகத்தை தழுவி இந்த படத்தை இயக்க தனக்கு அழைப்பு வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நிலையில் இப்படம் இருப்பதாகவும், விரைவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.