News April 4, 2025
IPL-ல் வரலாறு படைத்த KKR

3 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 20 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற சாதனையை கொல்கத்தா அணி படைத்துள்ளது. ஹைதராபாத் அணியுடனான நேற்றையை போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், SRH எதிராக 20 வெற்றிகளை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. அதேபோல், பஞ்சாப் அணிக்கு எதிராக 21 வெற்றிகளையும், பெங்களூரு அணிக்கு எதிராக 20 வெற்றிகளையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.
Similar News
News April 12, 2025
பிரதமரிடம் கருத்து கூற விருப்பமா? ஃபோனை எடுங்க!

PM மோடியிடம் உங்களது கருத்துகளை பகிர விரும்புகிறீர்களா? புதிய சிந்தனை மூலம் தேசத்திற்கு உதவ விரும்புகிறீர்களா? அப்படியெனில் MyGov.in அல்லது 1800 11 7800 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழையுங்கள். ஏப்.25 ஆம் தேதி வரை தொலைபேசி இணைப்புகள் உங்களுக்காக காத்திருக்கும். உங்களது சிந்தனைகள், யோசனைகளை ஏப்.27 ஆம் தேதி அன்று மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் PM மோடி நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வார்.
News April 12, 2025
என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதை அடுத்து, ராமதாஸை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். ஆனால், அன்புமணியை சந்தித்துவிட்டு வந்தவர்களை அவர் காண மறுத்து வருகிறார். இதனால் தைலாபுரத்தில் காத்திருந்த மூத்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர். இந்தச் சூழலில் பாமகவிற்கு தானே தலைவர், தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News April 12, 2025
திருப்பதிக்கு போறீங்களா! முதல்ல இதப் படிங்க…

சனி, ஞாயிறு, தமிழ் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக்கிழமையான நேற்று முதலே திருமலையில் பக்தர்கள் குவிந்து வருவதால், இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் 31 க்யூ காம்ப்ளக்ஸின் பெட்டிகளும் நிரம்பி வழிந்தன. இதனால் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையும் நேற்று ₹3.01 கோடி வசூலானது.