News April 4, 2025
டாப் ஹீரோக்களை பொளந்து விட்ட சசிகுமார்

தங்களுக்கு 25 வயதில் பையன் இருந்தும், அப்பா கேரக்டரில் நடிக்க சில ஹீரோக்கள் தயங்குவதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதை பல ஹீரோக்களிடம் சொல்லப்பட்ட பிறகே தன்னிடம் வந்ததாகவும், கதை பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபகாலத்தில் கேட்ட கதைகளிலேயே இந்த கதைதான் முழுத் திருப்தியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
பிரான்ஸில் போராட்டம்: குவியும் 8 லட்சம் பேர்

பிரான்ஸில் ஆசிரியர்கள், ரயில் டிரைவர்கள், மருந்தாளுநர்கள், ஹாஸ்பிடல் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்ட போராட்டத்தில் தற்போது மாணவர்களும் இணைந்துள்ளனர். சிக்கன நடவடிக்கையை நிறுத்தி நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும், பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தை தடுக்க 80,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News September 18, 2025
₹3.5 கோடி கடனில் இருக்கிறேன்: அண்ணாமலை

தனக்கு ₹3.5 கோடி கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொந்தமாக சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வாங்கிய விஷயத்தில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அண்ணாமலை, வேண்டுமென்றால் திமுக அரசு DVAC அனுப்பி சோதனை நடத்தட்டும் என்று சவால் விடுத்தார்.
News September 18, 2025
மியூசிக் டைரக்டர் Pick-லும் விஜய் கில்லி தான்: விஜய் ஆண்டனி

வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கு மட்டுமே விஜய் தன்னை இசையமைக்க பரிந்துரைத்தார் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் விஜய் சிறப்பாக செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வேட்டைக்காரன் படத்தில் ஷங்கர் M, சுசித்ராவை பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று விஜய்யே பரிந்துரைத்ததாகவும், அது ஹிட் ஆனதாகவும் பகிர்ந்துள்ளார்.