News April 4, 2025
72,000 வீடியோக்கள்.. உலக மகா கொடூரர்களின் இழிசெயல்

டார்க் வெப்பில் குழந்தைகள் ஆபாச வீடியோ தளமான Kidflix-ஐ ஜெர்மன் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் இந்த வீடியோக்களை பார்த்ததும், குழந்தைகளை துன்புறுத்தி வீடியோக்களை அப்லோடு செய்ததும் தெரியவந்துள்ளது. மொத்தம் 72,000 வீடியோக்கள் இந்த தளத்தில் இருந்துள்ளது. 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 நாடுகளின் உதவியோடு ஜெர்மன் அதிகாரிகள் இந்த ஆப்ரேஷனை முடித்துள்ளனர்.
Similar News
News February 22, 2026
FLASH: 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது சிபிஎம்!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை மார்க்சிஸ்ட்(CPM) அமைத்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான இக்குழுவில் கனகராஜ், சாமுவேல், கண்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்ற இக்கட்சி வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப் பெறும் திட்டத்தில் உள்ளது.
News February 22, 2026
கர்நாடகாவின் CM விரைவில் மாறுகிறாரா?

கர்நாடகாவில் CM சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிந்ததால், பதவியை தன்னிடம் <<18620476>>ஒப்படைக்க வேண்டும்<<>> என்று DKS சிவகுமார் கோருவதாக பேசப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே நடந்து வரும் அதிகாரப் போட்டிக்கு காங்., விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோளி தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து உயர்மட்டக் குழு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News February 22, 2026
ஓவர் லக்கேஜ் வண்டி திமுக: கடம்பூர் ராஜு

விஜய்யை பார்த்து பயப்படுவதால்தான் இடம் இருக்கோ இல்லையோ, எல்லாரையும் சேர்த்து திமுக ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது என கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். ஓவர் லக்கேஜ் வண்டி ஓடாது என்ற அவர், கூட்டணி என்ற பெயரில் இருக்கிற கட்சிகளை எல்லாம் இழுத்து போடுவதாகவும் கிண்டலடித்துள்ளார். மேலும், எந்த கட்சியாலும் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்க முடியாது எனவும் தேர்தலில் வெல்லப்போவது NDA கூட்டணிதான் என்றும் கூறியுள்ளார்.


