News April 4, 2025
ரோஹித்தை அரணாக தாங்கி நிற்கும் பொல்லார்ட்

ஒரு சில போட்டிகளில் குறைவான ரன்கள் எடுத்ததற்காக ரோஹித் இப்படிதான் விளையாடுவார் என முடிவு செய்து விட முடியாது என MI பேட்டிங் கோச் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் எனவும், மும்பை அணி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். IPL-ல் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 21 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
Similar News
News April 12, 2025
தமிழக மக்களுக்கு இபிஎஸ் துரோகம்: கனிமொழி சாடல்

பாஜகவின் பல மசோதாக்களை எதிர்ப்பது போல் எதிர்த்த இபிஎஸ் இன்று அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவிட்டு தற்போது நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு அதிமுக துரோகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக அதிமுக பிரிந்து விட்டதாக சொல்வது நாடகம் என முதல்வர் சொன்னது உண்மையாகிவிட்டதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
News April 12, 2025
வரலாற்றில் இன்று

➤1983 – காந்தி திரைப்படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது. ➤2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கி.மீ. தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது. ➤1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. ➤2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்,
News April 12, 2025
உசைன் போல்ட்டின் பொன்மொழிகள்

⁎பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். ⁎மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது கருத்தே இறுதியானது. ⁎நான் என்ன செய்தாலும் அதில் மட்டுமே என் முழு கவனமும் இருக்கும். ⁎உங்களுக்கு என்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டும். ⁎உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.