News April 4, 2025
வக்ஃபு மசோதா: திடீரென பேக் அடித்த நவீன்

பிஜு ஜனதா தள எம்பிக்கள் தங்கள் மனசாட்சி படி வக்ஃபு திருத்த மசோதாவிற்கு வாக்களிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு எதிராக வாக்களிப்போம் என அக்கட்சி நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது திடீரென பேக் அடித்துள்ளது. சிறுபான்மை சமூகத்தினரின் உணர்வுகளை மதித்து இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு மாநிலங்களவையில் 7 எம்பிக்கள் உள்ளனர்.
Similar News
News March 26, 2026
வெயிலில் முகத்தை மறைப்பது சருமத்தை பாதுகாக்குமா?

வெயிலில் செல்லும்போது பெண்கள் துப்பட்டாவால் முகத்தை கவர் செய்வதை பார்த்திருப்போம். இது உண்மையில் சருமத்தை பாதுகாக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். சூரியனின் புற ஊதா கதிர்கள், காற்று மாசு ஆகியவற்றில் இருந்து இது சருமத்தை காப்பதோடு, சன் டானிங், சன்பர்ன் ஆகாமலும் இது தடுக்கிறது. பருத்தியாலான திக்கான துப்பட்டாவை பயன்படுத்தி முகத்தை மூடிவிட்டு வெளியே செல்லும்படி டாக்டகள் கூறுகின்றனர். SHARE IT
News March 26, 2026
ஈரானுக்கு அடுத்த அதிர்ச்சி… கடற்படை தளபதி கொலையா?

ஹார்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு கப்பல்களை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய ஈரான் IRGC கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரான் அருகே ஏற்கெனவே உயர் தலைவர் தொடங்கிய பல முக்கிய தலைவர்களை இழந்த ஈரானுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் இதை இஸ்ரேலிய ராணுவமோ அல்லது ஈரான் தரப்போ உறுதிச் செய்யவில்லை.
News March 26, 2026
அப்பா கிட்ட அடிமையாகிட்டார் சேகர் பாபு: தமிழிசை

திமுக குடும்ப அரசியல் என்றால், தமிழிசை, ஜி.கே.வாசன் ஆகியோர் அரசியல் வாரிசுகள் இல்லையா என சேகர்பாபு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழிசை, சேகர்பாபுவுக்கு எங்களை பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என தெரிவித்துள்ளார் அம்மாவால் வளர்க்கப்பட்ட அவர், அப்பாவிடம்(ஸ்டாலின்) அடிமையாகிவிட்டதாகவும், அப்பா(குமரி அனந்தன்) வளர்த்த பெண்ணை பற்றி சேகர்பாபு பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.


