News April 4, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 04) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News April 11, 2025

பொன்முடியின் பொறுப்புக்கு வந்த திருச்சி சிவா!

image

திமுக துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவம் குறித்து <<16061152>>பொன்முடி பேசிய<<>> பேச்சு சர்ச்சையான நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை விடுவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து, துணைப் பொதுச் செயலாளராக நியமிப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News April 11, 2025

ஓடிடியில் இன்று ஒரே நாளில் 18 படங்கள்!

image

ஓடிடியில் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இன்று விருந்து காத்திருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் என ஒரே நாளில் 18 படங்கள் ரிலீஸாகின்றன. தெலுங்கு திரைப்படமான கோர்ட், தமிழ் படமான பெருசு, இந்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய சாவா ஆகியவை NETFLIX-ல் வெளியாகியுள்ளன. AMAZON பிரைம், AAHA, SUNNXT ஓடிடி தளங்களிலும் புதியப் படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன.

News April 11, 2025

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான வழக்கு: ஏப்.16ல் விசாரணை

image

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தாக்கலான மனுக்களை வரும் ஏப்.16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்ஜய் குமார், விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் இம்மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. அதே போல் மத்திய அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் சட்டம் தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!