News April 4, 2025
சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLA!

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சியில் மேஜர் ஸ்ரீ விக்கிர ராமர் என்ற கோயில் உள்ளது இது சுமார் 1,200 வருட பழமையானது. அந்த கோயிலில் அன்னதான மண்டபம் கட்டித்தர இயலுமா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மக்களுக்கு பயன்படுமானால் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Similar News
News November 7, 2025
குமரியில் நூதன முறையில் நகை பறிப்பு

வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் தங்க லட்சுமி(70). இவரது மகன் இருதய சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க தங்க லட்சுமி வந்த போது ஒருவர் அடையாள அட்டை கிடைத்தால் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை கழற்றி வாங்கி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
News November 7, 2025
குருந்தன்கோட்டில் தேனீ வளர்ப்பு பயிற்சி

குருந்தன்கோடு வட்டாரத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் விவ சாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நாகர்கோவில் ஆத்திக்காட்டு விளையில் அடுத்த வாரம் துவங்கப்படுகிறது. இதில் 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ மூலம் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
குமரி முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலராக R. பிரின்ஸ் ஆரோக்கியராஜ் நேற்று 06/11/2025 பணியேற்றுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியாக இருந்த இவர், பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலதண்டாயுதபாணி சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


