News April 4, 2025

தென்காசி: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம் 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

தென்காசி: தங்கத்தேர் உள்ள முருகன் கோவில் – தெரியுமா?

image

தென்காசி மாவட்டத்தில் தங்கத் தேர் உள்ள முருகன் கோவில் செங்கோட்டை அருகே பண்பொழி மலை மேல் உள்ள திருமலை குமரன் கோவிலில் மட்டும் தான் தங்கத்தேர் உள்ளது. விசேஷ தினங்களில் தங்கத் தேர் இழுக்கப்படும் மேலும் பக்தர்கள் குடும்பத்துடன் கட்டணம் ரூபாய் 1,200 செலுத்தினால் பக்தர்களே தங்கள் கைகளால் தங்கத் தேரை வடம் பிடித்து இழுக்கலாம், தமிழக மட்டுமின்றி கேரள பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய கோவிலாகும்.

News April 11, 2025

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் பணி 

image

தென்காசி மாவட்டத்தில் சத்துணவுமையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் மாவட்ட ஆட்சியர் தகவல் பணியில் ஈடுபடுவோருக்கு மாதம் ரூ.3000/- தொகுப்பூதியமும். ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000 – 9000)) ஊதியம் வழங்கப்படும். (கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி) விண்ணப்பத்தினை ஏப்.25ம் தேதிக்குள் அப்பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.

error: Content is protected !!