News April 4, 2025
IPL: கொல்கத்தா அணி அபார வெற்றி…!

SRH அணியை வீழ்த்தி KKR அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த KKR அணியில், வெங்கடேஷ் ஐயர்(60), ரகுவன்ஷி(50) அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 200 ரன்கள் குவித்தது. கடினமான இலக்குடன் களமிறங்கிய SRH, தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனால், இறுதிவரை போராடியும் பலனில்லை. KKR வீரர்கள் வருண், அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News April 11, 2025
பிஹார், உ.பியில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பலி!

உ.பி மற்றும் பிஹார் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதே போல், உ.பியில் வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்களும் சேதமடைந்தன. இதே போல், பிஹாரில் பாஹல்பூர், ஜெகனாபாத், சாப்ரா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
News April 11, 2025
ஒரு சவரன் ₹70,000-ஐ நெருங்கிய தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.11) சவரனுக்கு ₹1,480 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,745-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹69,960-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ₹1 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹108-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,08,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்களது கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News April 11, 2025
1.55% உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

பங்குச்சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய உடன் சென்செக்ஸ் 1,147 புள்ளிகள் உயர்ந்து 74,994ஆகவும், நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து 22,780ஆகவும் வர்த்தகமாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் மெல்ல மெல்ல மீண்டு வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.