News April 3, 2025

ஜேடியு கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகல்

image

வஃக்பு சட்ட (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதீஷ்குமாரின் ஜேடியுவில் இருந்து 2 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். மக்களவையில் நேற்று அந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் ஜேடியு கட்சி ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேடியு சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அஸ்ரப் அன்சாரி, மூத்த தலைவர் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் விலகியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?

Similar News

News April 11, 2025

பாஜக தலைவர் தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல்!

image

தமிழக பாஜக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், தங்களது விருப்பமனுவை தாக்கல் செய்யலாம் என கட்சியின் மாநிலத் தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

News April 11, 2025

பிரபல நடிகர் மரணத்தில் விலகிய மர்மம்!

image

ஹாலிவுட் நடிகர் வால் கில்மர்(64) கடந்த 7-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், நிமோனியா மற்றும் தொண்டைப் புற்றுநோயே கில்மர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. நடிகர் வால் கில்மர் ‘டாப் கன்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் என்பது கவனிக்கத்தக்கது.

News April 11, 2025

பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்ற 5,800 சீக்கியர்கள்!

image

வரலாற்றிலேயே முதல்முறையாக 6,751 விசாக்கள் வழங்கி இந்திய சீக்கிய யாத்ரீகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது பாகிஸ்தான். அங்குள்ள சீக்கிய குருத்வாராக்களை தரிசிக்க நேரு – லியாகத் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பைசாகி கொண்டாட்டத்துக்காக இந்த முறை இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசாக்களை வாரி வழங்கி இருக்கிறது. இதையடுத்து சுமார் 5,800 பேர் அட்டாரி – வாகா எல்லை வழியாக சென்றனர்.

error: Content is protected !!