News April 3, 2025

மகளிர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர்

image

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 11, 2025

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தாய் புகார்

image

மோப்பிரிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ்-ஜெயசுதா தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது பிரகாஷ், ஜெயசுதாவை தாக்கியுள்ளார், அதனை தொடர்ந்து ஜெயசுதா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஜெயசுதாவை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயசுதாவின் தாய் நேற்று அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

News April 11, 2025

தர்மபுரி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

▶️தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342231500 ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது): 231500 ▶️தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் 9445000908 ▶️தர்மபுரி தீயணைப்பு நிலையம் 04342230100 ▶️தர்மபுரி போக்குவரத்து அலுவலகம் 9384808242 ▶️தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 9499055945 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 11, 2025

தனியார் மருத்துவமனையில் ரூ.3 கோடி மோசடி 

image

தர்மபுரி சேலம் சாலை உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாண்மை இயக்குநர் சங்கீதா மருந்துகள் வழங்கும் பிரிவில் நேற்று ஆய்வு மேற்கொண்ட போது, உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 3 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது கண்டுபிடித்து தர்மபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மகேஸ்வரி, கஸ்தூரி கார்மேகம், நந்தேஷ்குமார் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

error: Content is protected !!