News April 3, 2025
என்ன பண்ண போறீங்க.. மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

USAவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்திய நிலத்தை திரும்ப தரும்படி மோடியும், குடியரசுத் தலைவரும் சீனாவுக்கு கடிதம் எழுதியது குறித்து சீன தூதர் தெரிவித்ததை வைத்தே விஷயம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக விமர்சித்தார். இந்திய நிலத்தை திரும்ப பெற அரசு என்ன செய்ய போகிறது எனவும் வினவினார்.
Similar News
News March 15, 2026
தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன?

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) என்பது தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காக வகுக்கப்படும் வழிகாட்டுதல்கள் ஆகும். ECI தேர்தலை அறிவித்தவுடன் இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிடும். அரசு அதிகாரம், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்வது நடத்தை விதியின் முக்கிய நோக்கம்.
News March 15, 2026
சொந்த வாகனங்களுக்கான FASTag கட்டணம் உயர்கிறது

சொந்த வாகனங்களுக்கான வருடாந்தர FASTag கட்டணம் 2.5% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ₹3,000-லிருந்து ₹3,075 ஆக கட்டணம் உயர்கிறது. சொந்த கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இக்கட்டண மாற்றம் பொருந்தும். வணிக ரீதியான வாகனங்களுக்கு தற்போதுள்ள கட்டண நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
News March 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னை நாவலூரிலுள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் (4 வயது பெண் & ஒன்றரை வயது ஆண்) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் வெடித்ததும் வீட்டுச்சுவரும் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மேலும் 7 பேர் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அருகிலிருந்த 3 வீடுகள், பைக், கார் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


