News April 3, 2025

நாடு பிடிப்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை: மோடி

image

வளர்ச்சி மீதே இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது, நாடு பிடிப்பதில் நம்பிக்கை வைக்கவில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். தாய்லாந்து பிரதமர் சினவத்ராவுடன் பேச்சு நடத்தியபின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய மோடி, கலாச்சாரம், ஆன்மீக ரீதியில் இந்தியா, தாய்லாந்து நாடுகள் இடையே பல நூறாண்டு நல்லுறவு நிலவுவதாகவும், பெளத்த மதம் 2 நாட்டு மக்களையும் ஒன்றாக இணைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News

News April 11, 2025

ஜாக்கி சானின் பொன்மொழிகள்

image

⁎நான் ஒருபோதும் அடுத்த புரூஸ் லீ ஆக இருக்க விரும்பவில்லை. நான் முதல் ஜாக்கி சானாக மட்டுமே இருக்க விரும்பினேன். ⁎சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள். ⁎சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பும் அக்கறையுமே போதுமானது. ⁎ஒரு கதை முடிவடைந்தவுடன், மற்றொரு கதை தொடங்குகிறது.

News April 11, 2025

நானியின் ஹிட் 3.. டிரெய்லர் அப்டேட்

image

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ‘ஹிட் 3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் மே 1-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடந்து முதல் பாடலான ‘ப்ரேம வெல்லுவா’ வெளியானது. தற்போது டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படக்குழு அதுகுறித்து அப்டேட் கொடுத்துள்ளது. டிரெய்லர் வரும் 14-ம் தேதி வருகிறதாம்.

News April 11, 2025

போப்பை சந்தித்து நலம் விசாரித்த கிங் சார்லஸ்

image

உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போப் ஆண்டவர், சமீபத்தில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் சந்தித்தனர். மன்னர் சார்லஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இத்தாலிக்கு வந்தபோது வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்ததாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!