News April 3, 2025

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் காலமானார்

image

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் Lee Montague (97) காலமானார். டிவி தொடரில் ஆரம்பத்தில் நடித்த அவர், பிறகு பல்வேறு திரைபடங்களிலும் நடித்துள்ளார். அதில் Brass Target, Brother Sun, Sister Moon and How I Won The War உள்ளிட்டவைகளும் அடங்கும். 1965ஆம் ஆண்டில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Jackanory-இல் 5 தொடர்கள் கதைசொல்லியாக செயல்பட்டதற்கு பாப்டா விருது பெற்றுள்ளார்.

Similar News

News March 13, 2026

கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி: EPS

image

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் திமுகவின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என EPS சாடியுள்ளார். <<19370719>>கனிமொழியை <<>> அச்சிறுமியின் உறவினர்கள் விரட்டி அனுப்பியதே இதற்கு சாட்சி எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய திமுக அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் <<19364920>>போராட்டத்தை <<>> NDA கூட்டணி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுக, தவெகவுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் ஆதரவாளராக இருந்த திருவையாறு Ex MLA MGM சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சென்னையில் EPS-ஐ சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார். ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்வது OPS-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

News March 13, 2026

CINEMA 360: வேள்பாரியில் தனுஷ்!

image

*ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தில் தனுஷ் & விக்கி கவுசல் நடிப்பார்கள் என கூறப்படுகிறது *ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதத்திற்கு தள்ளிப்போகிறதாம் *‘கர’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது *‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்காக சம்பளம் வழங்கவில்லை என அறிவு பதிவிட, ஆதாரத்துடன் விவாதிக்க தயாரா என சந்தோஷ் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!