News April 3, 2025
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூப்

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த லைப்ஸ்டைல் கோச் லூக் குட்டினோ அளிக்கும் சூப் ரெசிபி: தேவையான பொருட்கள் : சர்க்கரைவள்ளி கிழங்கு-1, பூண்டு -1, ஸ்பிரிங் ஆனியன்-கொஞ்சம், பார்ஸ்லி, ரோஸ்மெரி -சிறிதளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சூப் தயாரிக்கவும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி சளி, ஃப்ளூ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ட்ரை பண்ணலாமே!
Similar News
News April 11, 2025
ஜாக்கி சானின் பொன்மொழிகள்

⁎நான் ஒருபோதும் அடுத்த புரூஸ் லீ ஆக இருக்க விரும்பவில்லை. நான் முதல் ஜாக்கி சானாக மட்டுமே இருக்க விரும்பினேன். ⁎சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள். ⁎சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பும் அக்கறையுமே போதுமானது. ⁎ஒரு கதை முடிவடைந்தவுடன், மற்றொரு கதை தொடங்குகிறது.
News April 11, 2025
நானியின் ஹிட் 3.. டிரெய்லர் அப்டேட்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ‘ஹிட் 3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் மே 1-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடந்து முதல் பாடலான ‘ப்ரேம வெல்லுவா’ வெளியானது. தற்போது டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படக்குழு அதுகுறித்து அப்டேட் கொடுத்துள்ளது. டிரெய்லர் வரும் 14-ம் தேதி வருகிறதாம்.
News April 11, 2025
போப்பை சந்தித்து நலம் விசாரித்த கிங் சார்லஸ்

உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போப் ஆண்டவர், சமீபத்தில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் சந்தித்தனர். மன்னர் சார்லஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இத்தாலிக்கு வந்தபோது வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்ததாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.