News April 3, 2025
அதிமுக – பாஜக கூட்டணி: அடுத்தடுத்து நகர்வுகள் என்ன?

பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அடுத்தடுத்து முக்கியமான அரசியல் நகர்வுகள் நடக்கவிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர். அதன்படி கூட்டணியை பலப்படுத்த இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் பிரதமர் மோடி தனித்தனியே நேரம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் வந்து சென்றபின் பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் யார்? என்பதும் உறுதியாகிறது. கூட்டணிக்கும் அச்சாரம்; உள்கட்சியிலும் மாற்றம்!
Similar News
News April 11, 2025
BREAKING: டெல்லி அணி 4ஆவது வெற்றி

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை குவித்தது. இதையடுத்து 164 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. கே.எல். ராகுல் 93 ரன்களை விளாசினார்.
News April 11, 2025
தமிழ் புத்தாண்டு விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி (ஏப்.14) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு 10, 17ம் தேதிகளிலும், குமரியில் இருந்து சென்னைக்கு 11,18ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், சென்ட்ரல்- கொல்லத்துக்கு 12, 19ம் தேதிகளிலும், கொல்லம்- சென்ட்ரலுக்கு 13, 20ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
News April 11, 2025
ராசி பலன்கள் (11.04.2025)

➤மேஷம் – போட்டி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – உதவி ➤கடகம் – நலம் ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – பக்தி ➤துலாம் – முயற்சி ➤விருச்சிகம் – ஓய்வு ➤தனுசு – பயம் ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – அலைச்சல் ➤மீனம் – ஆதரவு.