News April 3, 2025
திருவாரூர் திட்டப் பயனாளிகள் குறைகளை தெரிவிக்க அழைப்பு

திருவாரூரில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைபாடுகள் இருப்பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூர் 7402607529, நன்னிலம் 7402607533, குடவாசல் 7402607538, கொரடாச்சேரி 7402607442, வலங்கைமான் 7402607566, மன்னார்குடி 7402607554 உள்ளிட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணவும்)
Similar News
News October 30, 2025
விவசாயிகளுக்கு 545 கோடி வரவு வைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2025,2026 குருவை பருவத்தில் 378 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 27 ஆயிரத்து 434 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் இதுவரை 79 சதவீத நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் வங்கி 545 கோடி வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு 30,477 விவசாயிகள் பயனடைந்தனா் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
திருவாரூர்: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

திருவாரூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News October 30, 2025
திருவாரூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


