News April 3, 2025
மதுரை:மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மாநில அளவிலான விருது பெரும் வட்டார அளவிலான கட்டமைப்புக்கு 5 லட்சம்,ஊராட்சி அளவிலான கட்டமைப்புக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழு ஆய்வு செய்து மாநில மாவட்ட விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.SHARE
Similar News
News September 18, 2025
மதுரையிலே பணி நியமனம் ரூ.25,000 சம்பளம்

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருந்தக உதவியாளர் பணி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News September 18, 2025
மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
News September 18, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் வளையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை,பாரபத்தி, சோளாங்கூரணி, நல்லூர்,குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வளையப்பட்டி, ம ஒ.ஆலங்குளம், கொம்பாடி, உசிலம்பட்டி, வாலாந்தூர், நாட்டார்மங்கலம், தும்மக்குண்டு, சேடப்பட்டி, காலப்பன்பட்டி, பூசலாபுரம், தங்கலாச்சேரி, அழகுரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.