News April 3, 2025
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: 5 ராசிகளுக்கு எதிர்பாராத லாபம்

மிதுனம், கன்னி ராசி அதிபதியான புதன், மீன ராசியில் நீச நிலையில், வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில், அவர் வருகிற 7ம் தேதி மாலை 4.04 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து முன்னோக்கி நகர உள்ளார். புதனின் இந்த அமைப்பால் குடும்ப அமைப்பு, கல்வி, தொலைத் தொடர்பு, வணிகம் போன்ற விஷயங்களில், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு ராசிக்காரர்கள் வெற்றிகளை குவிப்பார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
ராசி பலன்கள் (14.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 14, 2026
Adobe நிறுவன CEO சாந்தனு நாராயண் விலகல்

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான Adobe-ன் CEO பொறுப்பில் இருந்து சாந்தனு நாராயண் விலகியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், 18 ஆண்டுகளாக அந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றினார். பதவி விலகுவதாக அறிவித்த உடனே Adobe-ன் பங்குகள் 7% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. இவரது தலைமையின் கீழ் Photoshop, Premiere Pro, Illustrator, InDesign போன்றவை உலகத் தரமான படைப்புகளாக மாறின.
News March 14, 2026
பெட்ரோல், டீசல்.. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தட்டுப்பாடும் இல்லை எனவும் இன்னும் 90 நாள்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


