News April 3, 2025
சர்க்காரியா கமிஷன் அறிக்கை: மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்று மோடிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நடைபெறும் CPM மாநாட்டில் பேசிய அவர், குஜராத் CMஆக பதவி வகித்தபோது சர்க்காரியா கமிஷன் அறிக்கையை அமல்படுத்த மோடி <<15982786>>கோரிக்கை வைத்ததாக<<>> தெரிவித்தார். அப்படியிருக்கையில் 3ஆவது முறை பிரதமராகியும் அதை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என வினவினார்.
Similar News
News September 22, 2025
மூலிகை: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா..

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➣பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் & கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் ➣ஃபோலேட் இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது ➣பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது ➣பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை வராமல் தடுக்கும். இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 22, 2025
மீண்டும் இணைந்த டிரம்ப்- எலான் மஸ்க்

அமெரிக்க வரி மசோதா விவகாரத்தில் டிரம்ப் – எலான் மஸ்க் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. டிரம்ப்பை எதிர்த்து புதிய கட்சி தொடங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். 3 மாதம் நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கொல்லப்பட்ட வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினர். இந்த போட்டோவை X தளத்தில் பகிர்ந்த மஸ்க், FOR CHARLIE என பதிவிட்டுள்ளார்.
News September 22, 2025
விஜய்க்கு தகுதியே இல்லை: KN நேரு

இபிஎஸ், விஜய்யை KN நேரு கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறிய நிலையில், திமுகவுடன் நேரடியாக மோத உனக்கு(விஜய்) தகுதியே இல்லை தம்பி என அவர் சாடியுள்ளார். மேலும், 4 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டு, தற்போது இபிஎஸ் வெளியே வந்திருப்பதாக குறிப்பிட்ட நேரு, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்றார்.