News April 3, 2025

அன்று CM மோடி சொன்னது

image

இன்றைய PM மோடி, 2012-ல் குஜராத் CM-மாக இருந்தபோது பேசியதை, இன்று CM ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், மத்திய- மாநில உறவுகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளையும், மத்திய-மாநில நிதிசார் உறவுகள் தொடர்பான நீதிபதி மதன்மோகன் கமிஷன் பரிந்துரைகளையும் மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் எனவும் அப்போது மோடி வலியுறுத்தியிருந்தார்.

Similar News

News April 11, 2025

தமிழ் புத்தாண்டு விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தமிழ் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி (ஏப்.14) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு 10, 17ம் தேதிகளிலும், குமரியில் இருந்து சென்னைக்கு 11,18ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், சென்ட்ரல்- கொல்லத்துக்கு 12, 19ம் தேதிகளிலும், கொல்லம்- சென்ட்ரலுக்கு 13, 20ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

News April 11, 2025

ராசி பலன்கள் (11.04.2025)

image

➤மேஷம் – போட்டி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – உதவி ➤கடகம் – நலம் ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – பக்தி ➤துலாம் – முயற்சி ➤விருச்சிகம் – ஓய்வு ➤தனுசு – பயம் ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – அலைச்சல் ➤மீனம் – ஆதரவு.

News April 11, 2025

இந்தியாவில் இருந்து 600 டன் ஐபோன் ஏற்றுமதி

image

இந்தியாவில் இருந்து USA-க்கு 600 டன் ஐ-போன்கள் (15 லட்சம் போன்கள்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை USA உயர்த்தியுள்ளது. இதை தற்காலிகமாக 90 நாட்கள் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஆதலால் வரி அமலுக்கு வரும் முன்பு, USA-க்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.

error: Content is protected !!