News April 3, 2025

சாந்தமாக காட்சி தரும் பரிக்கல் நரசிம்மர்

image

விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில். நரசிம்மர் பொதுவாக ஆக்ரோஷமான தெய்வமாக அறியப்படுவதால் கோயில்களில் பெரும்பாலும் லக்ஷ்மியை மடியில் வைத்துள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுவர். ஆனால் இங்கு நரசிம்மர் சாந்தமாக காட்சி தருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான ஆலயமாக உள்ள இங்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News April 11, 2025

அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழந்தார். செஞ்சி வட்டம் காட்டுசித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்விழி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். இதில், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் ஆகியவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

image

புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார். இவரது மனைவி செல்லியம்மாள் கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!