News April 3, 2025

வார இறுதிநாள் விடுமுறை: 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார இறுதிநாள் விடுமுறையையொட்டி, 627 சிறப்பு பஸ்களை 2 நாட்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்று 245 பஸ்களும், நாளை 240 பஸ்களும் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்றும், நாளையும் தலா 51 பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்றும், நாளையும் தலா 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. SHARE IT.

Similar News

News April 3, 2026

இந்தியாவின் இளம் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

பசி, தூக்கம் மறந்து நாட்டுக்காக தன்னலமற்று சேவையாற்றுபவர்கள் ஏராளம். அவர்களில் ஒரு மக்கள் நாயகனை இந்தியா இழந்துள்ளது. சிக்கிம் எல்லையில் பணியில் இருந்த உத்தரகாண்டை சேர்ந்த இளம் ராணுவ வீரர் விகாஷ் குமார்(24) இன்று காலமானார். ராணுவ மரியாதையுடன் அவரது உடல், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரை போன்றவர்களின் தியாகம் என்றுமே போற்றுதலுக்குரியது. GREAT SALUTE

News April 3, 2026

5 சிட்டிங் MLA-க்களை கழற்றிவிட்ட காங்கிரஸ்

image

17 சிட்டிங் MLA-க்களில் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ள காங்கிரஸ், 5 பேரை கழற்றிவிட்டுள்ளது. குளச்சல் MLA பிரின்ஸ், தென்காசி MLA பழனி, மயிலாடுதுறை MLA ராஜ்குமார், உதகை MLA கணேஷ், விருத்தாசலம் MLA ராதாகிருஷ்ணனுக்கு தேர்தலில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

கேஸ் சிலிண்டர்.. புதிய அறிவிப்பு வெளியானது

image

நாட்டில் வீட்டு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று இந்தியன் ஆயில் உறுதியளித்துள்ளது. தினமும் சுமார் 28 லட்சம் LPG சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்தும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பீதியடைந்து முன்பதிவு செய்வதையோ அல்லது வாங்கி பதுக்கி வைப்பதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.

error: Content is protected !!