News April 3, 2025
விண்வெளி பயணத்திற்கு ரெடியாகும் ‘சிங்கப் பெண்கள்’!

அமெரிக்க பாடகி உட்பட 6 பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன் ஏப். 14-ல் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை 10 முறை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 11-வது முறையாக செல்லும் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பேருடன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
Similar News
News April 10, 2025
எதிர்ப்பால் தள்ளிப் போகும் ரிலீஸ்

சாதிய பாகுபாட்டிற்கு எதிராக போராடிய ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘புலே’ என்ற ஹிந்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பிராமண சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாளை வெளியாக இருந்த இப்படம், 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், பல காட்சிகளை நீக்குமாறு சென்சார் போர்டும் அறிவுறுத்தியுள்ளது.
News April 10, 2025
ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் உயர்வு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2020 மார்ச் 10-க்கு முன் உயர்கல்வித் தகுதி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களை சரிபார்த்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
News April 10, 2025
ஊக்க ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது?

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கும் முறை. அதாவது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, கல்வியியல் என ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ப ஊக்க ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.