News April 3, 2025

வக்ஃப் வாரிய மசோதா: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

image

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பிளவுவாத அரசியல், இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் பாஜக அரசை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தவெக போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News April 14, 2025

அதிமுக நிர்வாகி விபத்தில் மரணம்: இபிஎஸ் இரங்கல்

image

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) நிர்வாகி செந்தில்குமாரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த இவரது மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, மிகுந்த பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

News April 14, 2025

விண்வெளிக்கு பறக்கும் சிங்க பெண்கள்

image

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலி லாரென், பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பெண்கள் அடங்கிய குழு இன்று விண்வெளிக்கு பறக்க உள்ளது. ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் NS-31 திட்டத்தின் படி இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு, பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விண்வெளி பயணமாக இது அமைய உள்ளது. இந்த பயணம் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என அப்பெண்கள் குழு தெரிவித்துள்ளது.

News April 14, 2025

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. மேலும், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் எனவும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!