News April 3, 2025
பாஜகவின் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம் – சு.வெ

கடுமையான விவாதங்களுக்கு பிறகு, மக்களவையில் நேற்று (ஏப்.2) வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய சு.வெங்கடேசன் எம்பி, “இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்தவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும். பாஜகவினருக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றை முழு நேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்” என்றார்.
Similar News
News April 10, 2025
மதுரை புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
வண்டியூர் மாரியம்மன் கோயிலின் ஐதீகம்

மதுரையின் காவல் தெய்வமாக வண்டியூர் மாரியம்மன் விளங்குகிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விஷேஷ நிகழ்ச்சி நடத்தினாலும், மாரியம்மனிடம் உத்தரவு கேட்ட பிறகே நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரியது எனும் பெயரை பெற்றுள்ளது. தீராத வியாதி, குடும்ப பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை நீங்க இங்கு வழிபட்டால் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். Share.
News April 10, 2025
மதுரையில் இன்றைய காய்கறி விலை

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்றைய (ஏப்.10) விலைநிலவரம்: தக்காளி ரூ.10 முதல் ரூ.20, பீட்ரூட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.60, கேரட் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, கத்திரிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, சீனி அவரைக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ. 15 முதல் ரூ.30 க்கும் விற்பனையாகிறது.