News April 3, 2025
துடிக்க துடிக்க 3 குழந்தைகளை… இதுக்கு பேர் காதலா?

ஹைதராபாத்தை சேர்ந்த தாய் ஒருவர், தனது 3 குழந்தைகளை துண்டால் கழுத்தை நெரித்து, துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். காரணம், காதல். ரஜிதாவிற்கு(30) சென்னையா(50) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தை விரும்பாத அவர், ஸ்கூல் ரீ-யூனியனில் சந்தித்த சிவாவை(30) திருமணம் கொள்ள, இந்த கொடூரத்தை செய்துள்ளார். உங்க காதலுக்கு 3 குழந்தைகள் ஏன் சாக வேண்டும் என இதுபற்றி நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Similar News
News April 10, 2025
லவ் ஜிகாத் தெரியும்.. அதென்ன சர்பத் ஜிகாத்?

சர்பத் ஜிகாத் நாட்டில் பரவி வருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். சில கம்பெனிகளின் சர்பத்தை நீங்கள் வாங்கினால், அந்த பணம் மசூதிகளை கட்ட பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தனது பதஞ்சலி சர்பத்தை வாங்கினால், அந்த பணம் குருகுலம் கட்ட உதவும் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மருத்துவ முறை குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
BREAKING: ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காணலாம். இப்போட்டியில் ஆர்சிபி வெல்லுமா, டெல்லி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
News April 10, 2025
ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா?

ரயில்களில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான ரயில்களில் 6 அல்லது 12 டிக்கெட்டுகள் இதுபோல இடஒதுக்கீட்டில் வழங்கப்படுகின்றன. 2ம் வகுப்பு படுக்கை வசதி, இருக்கை வசதியில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.