News April 3, 2025

5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…!

image

மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப். 4) விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காசி விசுவநாத சுவாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப். 7, 11-ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏப். 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Similar News

News April 10, 2025

சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

image

புதுச்சேரியில் 14 வயதுடைய இரு சிறுமிகளை 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. கடந்த 2-ம் தேதி காணாமல் போன சிறுமிகளை ஒருநாள் முழுவதும் அடைத்து வைத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட புஷ்பராஜ், மணி ஆகியோரை போக்சோவில் கைது செய்த போலீசார், சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News April 10, 2025

லவ் ஜிகாத் தெரியும்.. அதென்ன சர்பத் ஜிகாத்?

image

சர்பத் ஜிகாத் நாட்டில் பரவி வருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். சில கம்பெனிகளின் சர்பத்தை நீங்கள் வாங்கினால், அந்த பணம் மசூதிகளை கட்ட பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தனது பதஞ்சலி சர்பத்தை வாங்கினால், அந்த பணம் குருகுலம் கட்ட உதவும் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மருத்துவ முறை குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2025

BREAKING: ஆர்சிபி முதலில் பேட்டிங்

image

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காணலாம். இப்போட்டியில் ஆர்சிபி வெல்லுமா, டெல்லி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!