News April 3, 2025
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
Similar News
News April 10, 2025
BREAKING: ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காணலாம். இப்போட்டியில் ஆர்சிபி வெல்லுமா, டெல்லி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
News April 10, 2025
ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா?

ரயில்களில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான ரயில்களில் 6 அல்லது 12 டிக்கெட்டுகள் இதுபோல இடஒதுக்கீட்டில் வழங்கப்படுகின்றன. 2ம் வகுப்பு படுக்கை வசதி, இருக்கை வசதியில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
News April 10, 2025
ஜூன் மாதத்திற்குள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்

ஜூன் 15-க்குள் மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 வாங்கி வருகின்றனர். விடுபட்ட தகுதியான பெண்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு ரூ.1,000 அளிக்கப்பட இருப்பதாகவும் அரசு தெரிவித்து வந்தது. இந்நிலையில் புதிய விண்ணப்பம் ஜூன் 15க்குள் பெறப்பட்டு, ஜூலை மாதம் முதல் ரூ.1,000 அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.