News April 3, 2025
அண்ணாமலைக்கு டெல்லியில் நடந்தது என்ன? (1/2)

டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை அண்ணாமலை அண்மையில் சந்தித்தபோது என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி என்று அண்ணாமலையிடம் தலைவர்கள் கூறியதாகவும், இக்கூட்டணியை ஏற்றால் மாநில தலைவராக அவர் நீடிக்கலாம், கூட்டணிக்காக அண்ணாமலையை இழக்க விரும்பவில்லை, இனி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என தலைவர்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News October 14, 2025
மிக மோசமான நிலையில் உயர்கல்வி

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10,500 பணியிடங்களில் 9 ஆயிரத்திற்கும் மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், வெறும் ஆயிரம் நிரந்தர பேராசிரியர்களை கொண்டு கல்லூரிகள் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. முதல்வரே இல்லாமல் 100 கல்லூரிகள் செயல்படுவதாகவும், இதனால், உயர்கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
News October 14, 2025
இந்த மாதிரி குளித்தால் மாரடைப்பு வராது

முன்பெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த மாரடைப்பு, இப்போது 7 வயது குழந்தைக்கும் வருகிறது. இதனால், பெரியோர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் மாரடைப்புக்கு அஞ்சி டாக்டர்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. இதனிடையே, குளிர்காலம்(Winter Season) நெருங்குவதால் வெந்நீர் குளியல் மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அதனை அறிய மேலே உள்ள படங்களை SWIPE செய்து பாருங்க.
News October 14, 2025
‘பைசன்’ படத்தில் சியான் விக்ரமின் கனெக்ஷன்!

‘பைசன்’ திரைப்படத்தை துருவ் விக்ரம் தனது முதல் படமாக குறிப்பிடுவது விமர்சிக்கப்படும் போதிலும், இதில் ஒரு சுவாரசிய தகவல் உள்ளது. ‘சியான்’ விக்ரம் நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் படமான ‘என் காதல் கண்மணி’, கடந்த அக்டோபர் 17, 1990 அன்றுதான் வெளிவந்தது. 35 வருடங்கள் கழித்து, அதே தேதியில் தற்போது துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படமும் வெளியாகிறது. ‘பைசன்’ பெரிய வெற்றி படமாக அமையுமா?