News April 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Medical Officer, Special Educator, Psychologist ஆகிய பதவிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Ed, B.Sc, BA, M.Ed, M.Sc, MA, MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு <
Similar News
News December 19, 2025
பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணம் செய்த துணை முதல்வர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூவிருந்தவல்லியில் இன்று (டிச.19) 125 புதிய மின்சார தாழ்தள பேருந்துகளின் (45 ஏ.சி பேருந்துகள்) சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தாழ்தள பேருந்துகள் அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் சிவசங்கர் உள்ளிட்டோருடன் பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணம் செய்தார்.
News December 19, 2025
திருவள்ளூர் பத்திரிகையாளர் சங்க புதிய அலுவலகம் திறப்பு!

திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்க அலுவலகம் இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கலந்து கொண்டார். நிகழ்வில் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டு, சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவை கொண்டாடினர்.
News December 19, 2025
JUST IN:திருவள்ளூரில் 6.19 லட்சம் பேர் நீக்கம்

இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 6,19,777 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 22,69,499 வாக்காளர்கள் உள்ளனர் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


