News April 3, 2025

டாப் 5 பிளாஸ்டிக் மாசு நிறைந்த நாடுகள்!

image

பிளாஸ்டிக் மாசு நிறைந்த 5 நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது தெரியவந்திருக்கிறது. அடுத்தபடியாக 3.5 மி.டன்னுடன் நைஜீரியா, 3.4 மி.டன்னுடன் இந்தோனேஷியா, 2.8 மி.டன்னுடன் சீனா, 2.6 மி.டன்னுடன் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

Similar News

News April 10, 2025

2 கண்டங்கள், 14 நாடுகள், 30000 கிமீ: உலகின் நீளமான ரோடு!

image

பான் அமெரிக்க ரோடு, வட அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து, தென் அமெரிக்காவின் அர்ஜென்டினா வரை நீளுகிறது. மொத்தமாக 14 நாடுகள், 30 ஆயிரம் கிமீ கடக்கும் ரோட்டில் ஒரு கட்டோ, ஒரு யூ-டர்னோக்கூட வராது. நேராக, போய்க்கிட்டே இருக்கணும். இந்த ரோட்டை கடக்க 60 நாள்கள் ஆகுமாம். அதுவும் ஒரு நாளைக்கு 500 கி.மீட்டரை கடந்தால் தான்! அதனாலேயே, பலருக்கும் போர் அடித்து விடும். நீங்க இதில் ட்ராவல் பண்ண தயாரா!

News April 10, 2025

நாமக்கல் MP வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

image

நாமக்கல் தொகுதி MP மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பொட்டணம் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2025

இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, அது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுவதால், இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கணித்துள்ளது. மேலும், 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!