News April 3, 2025
கோழி இறைச்சி சாப்பிட்ட 2 வயது சிறுமி சாவு… எச்சரிக்கை!

ஆந்திராவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி உயிரிழந்தார். பல்நாட்டைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் இருந்த வேக வைக்காத கோழி இறைச்சியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை பாதித்த நிலையில் பலியானார். 2021-ல் பறவை காய்ச்சலுக்கு ஹரியானாவில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து 2ஆவது உயிரிழப்பு தற்போது நேரிட்டுள்ளது. ஆகவே, இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள். SHARE IT!
Similar News
News April 10, 2025
வீட்டு கடன்கள் மீதான வட்டி 8%க்கும் கீழ் குறைய வாய்ப்பு

ரெப்போ வட்டி தொடர்ந்து குறைக்கப்படுவதன் எதிரொலியாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8% கீழ் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டியை 2 முறை தலா 25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. எனினும், வங்கிகள் இன்னும் 8.15%க்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. அது வரும் நாள்களில் குறையக்கூடும் எனத் தெரிகிறது.
News April 10, 2025
நடிகை ஜாக்கி சீகல் வீட்டில் அடுத்தடுத்து மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜாக்கி சீகல் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 5-ம் தேதி அவரது கணவர் டேவிட் சீகல் உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் நேற்று அவரது சகோதரி ஜெசிகா மல்லேரி உயிரிழந்தார். கடந்த 2015-ல் ஜாக்கியின் மகள் விக்டோரியா அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்டதை தொடர்ந்து அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
News April 10, 2025
‘சொத்தில் பிள்ளைகளுக்கு 1% மட்டுமே’ பில்கேட்ஸ் அதிரடி!

தனது சொத்தில், பிள்ளைகள் 1 சதவீதத்திற்கும் குறைவான சொத்துக்களையே பெறுவார்கள் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து பேசிய அவர், ‘பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைத்துள்ளது. அவர்களின் வெற்றியை அவர்களே தேடிக் கொள்வார்கள் எனக் கூறினார். மேலும், தனது 99% சொத்துக்களை சமூகப் பணிகளுக்கு வழங்குவதாகவும் கூறி, மற்ற தொழிலதிபர்களையும் வழங்கிட கேட்டுக்கொண்டார். அவரின் சொத்து மதிப்பு ₹13.6 லட்சம் கோடியாகும்.