News April 3, 2025
Ghilbli’ அலப்பறை.. உங்களால் சிரிப்பை அடக்க முடியாது!

கடந்த ஒரு வாரமாகவே, Ghibli ட்ரெண்டால், சோஷியல் மீடியாவே அல்லோல கல்லோலப் படுகிறது. ஆனால் வர வர, அதில் நடக்கும் சில தவறுகள் கலாய்க்கும் படியாக மாறி வருகிறது. அழகான போட்டோஸ் பலர் பதிவிட, அதனை கண்டமேனிக்கு மாற்றிவிட்டது இந்த Ghibli. ஒருத்தர் ரெண்டு பேருக்கு என்றால் பரவால.. பலருக்கும் இதே நடக்க, இது என்னடா Ghibliக்கு வந்த சோதனை என கலாய்க்க தொடங்கி விட்டனர். நீங்களே பாருங்க!
Similar News
News April 10, 2025
இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, அது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுவதால், இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கணித்துள்ளது. மேலும், 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 10, 2025
பாஜக – அதிமுக கூட்டணி உறுதி: அண்ணாமலை

அமித்ஷாவுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது, கூட்டணிக்கு அவர்கள் ஒப்புக்கொண்டதை தெளிவாக காட்டுவதாக அண்ணாமலை பேசியிருக்கிறார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே பொதுவான குறிக்கோள் என்றும் அவர் கூறியிருக்கிறார். மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று காட்டமாக பேசிய அண்ணாமலை, திடீரென பல்டி அடித்திருக்கிறார். உங்கள் கருத்தை சொல்லுங்க.
News April 10, 2025
சிறுமிகளை விலைக்கு வாங்கி 1,500 திருமணம் செய்த பெண்!

ஏழைக் குடும்பங்களின் சிறுமிகளை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ₹2.5 – ₹5 லட்சம் வரை விற்பனை செய்து வந்த பலே பெண் சிக்கியுள்ளார். ராஜஸ்தானின் சஜன்புரா கிராமத்தில் இதற்காக ‘சர்வ சமாஜ்’ என்ற NGO நடத்தி இதுவரை 1,500 திருமணம் செய்து வைத்துள்ளார். உ.பி.யை சேர்ந்த 16 வயது சிறுமி அங்கிருந்து தப்பித்து போலீசில் அளித்த புகாரில் இந்த பலே மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளைஞர்களே உஷார்…!