News April 3, 2025

மூத்த பத்திரிகையாளர் க.சிவஞானம் காலமானார்

image

மூத்த பத்திரிகையாளரும், மேடைப் பேச்சாளருமான க.சிவஞானம் உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழில் முன்னணி ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்தவர். சிவஞானம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

Similar News

News March 21, 2026

புதுக்கோட்டை: டன் கணக்கில் புகையிலை அழிப்பு

image

இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை போலீஸ் நிலைய பகுதிகளில் வாகன சோதனையின்போது சுமார் 2 டன் (2000 கி.கி) புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனையடுத்து இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் இன்ஸ்பெக்டர்கள் கலா, நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, விஏஓ முருகேசன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் தீயிட்டு அழித்தனர்.

News March 21, 2026

புதுச்சேரி தேர்தலுக்கு தயாரான விஜய்

image

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என நினைத்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் 30 தொகுதிகளில் தவெக தனித்து களம் காண உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட உள்ளார். இவர்களும் அனைவரும் வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தொடர்ந்து அடுத்த வாரம் புதுச்சேரியில் விஜய் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.

News March 21, 2026

பெட்ரோல், டீசல் விலை.. இரவில் புதிய அறிவிப்பு

image

பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தது. அதன்படி நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பவர், எக்ஸ்பி 95, ஸ்பீடு பெட்ரோல்களின் விலை ₹108 வரையில் விற்கப்படுகிறது. ஆனால், சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹100.80, டீசல் ₹92.39-ஆகவும் உள்ளது.

error: Content is protected !!