News April 3, 2025

கோவையில் நூதன மோசடி 

image

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கார்த்திக்கின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் வந்துள்ளது. அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட கார்த்திக் ரூ.9.20 லட்சம் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். லாபமும் வரவில்லை. அசலும் வரவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 10, 2026

SSLC பொதுத்தேர்வு: 38,390 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

கோவையில் மார்ச் 11-ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் 159 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 949 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News March 10, 2026

கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று துவங்கியது

image

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக கோவை ஷார்ஜா மற்றும் கோவை- அபுதாபி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்.
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:10 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவை வந்தடைந்தது. அதேபோல அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஒரு விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.

News March 10, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!