News April 3, 2025
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
Similar News
News April 5, 2025
யூனுஸிடம் நேராக பாயிண்ட்டை பிடித்து பேசிய பிரதமர்

தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் போது, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கவலை அளிப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நீதி வழங்கவும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், எல்லை விவகாரம், இருநாட்டு உறவு சிக்கல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
News April 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 227 ▶குறள்: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.. ▶பொருள்: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
News April 5, 2025
சீனா பீதியடைந்துவிட்டது: டிரம்ப்

USA-வில் சீன இறக்குமதி பொருள்களுக்கு டிரம்ப் 34% வரி விதித்த நிலையில், சீனாவும் USA இறக்குமதிகளுக்கு அதே 34% கூடுதல் வரியை விதித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், சீனா தவறாக நடந்து கொண்டுவிட்டதாகவும், அவர்கள் பீதியில் இருப்பது வெளியில் தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தொடங்கியுள்ளது.