News April 3, 2025
‘எம்புரான்’ திரைப்படத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு!

‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு எதிரான இந்த திரைப்படத்தை இங்கு திரையிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என விமர்சித்துள்ளார். அதே நேரம் வக்பு வாரிய மசோதாவை பாமக ஆதரிக்கவில்லை என்றும், இஸ்லாமியர்களின் சொத்துகளை அவர்களே நிர்வகிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 30, 2026
சீன CCTV-களுக்கு தடை… ஆக்ஷனில் மத்திய அரசு

ஏப்ரல் 1 முதல் Hikvision, TP-Link, Dahua போன்ற சீன CCTV கேமராக்கள் மற்றும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. நாட்டில் விற்கப்படும் CCTV தயாரிப்புகளுக்கு கண்டிப்பாக அனுமதி(STQC சான்றிதழ்) பெற வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இண்டர்நெட்டுடன் சேர்ந்து இயங்கும் இந்த கேமராக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே இதற்கு காரணம். நாட்டில் 3-ல் 1 சீன CCTV ஆக உள்ளது.
News March 30, 2026
மாதம்பட்டி வழக்கில் திருப்பம் தந்த DNA ரிப்போர்ட்!

திருமணம் செய்து தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில் <<19297528>>மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு (DNA)<<>> பரிசோதனை மேற்கொள்ள சென்னை HC உத்தரவிட்டிருந்தது. அதன்படி பரிசோதனை நடத்தப்பட்டு சென்னை HC-யில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதியாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
News March 30, 2026
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலை காலையில் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், மாலையில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில், மாலையில் தடாலடியாக ₹1,360 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,770-க்கும், 1 சவரன் ₹1,10,160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, 3 நாள்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


