News April 3, 2025
கரும்பு கொள்முதல் விலை ₹4,000ஆக உயர்வு: அமைச்சர்

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நெல் குவிண்டாலுக்கு ₹2,500ஆக வழங்கப்படும் என்றும் கூறினார். அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 4, 2025
புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி, அரசம்பட்டி அருகே 3-ம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரியிலிருந்து ஆந்திராவின் பூதலப்பட்டு வரை அதியமான் பெருவழியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக புதிய கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. இதில், தண்டம், குடை, சேவல், பன்றி, ஏர்கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் புதிய ஆய்வுகளுக்கு வழி வகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
News November 4, 2025
எங்களிடம் மோதாதீர்கள் சீமான்: டி.ஜெயக்குமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது; அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும் என்று டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றதுதான் சுயமரியாதையா என்று இபிஎஸ்ஸை சீண்டிய சீமானுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் எங்ககிட்ட வந்து மோத வேண்டாம்; அதிமுக தொண்டர்களை வசைபாடினால் நிச்சயம் வாங்கி கட்டிக்கொள்வீர்கள் என எச்சரித்தார்.
News November 4, 2025
AK64-ல் அஜித்துக்கு இவர்தான் வில்லனா?

அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் AK64 படத்தின் ருசிகரமான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் அல்லது விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறதாம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் அஜித்துக்கு யார் Tough கொடுப்பாங்கனு நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?


