News April 3, 2025

நீலகிரி போராட்டம்: ரூ 10 கோடி வரை வருவாய் இழப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வணிகர்கள் தெரிவித்துள்ளனர். காட்டேஜ்கள், உணவு விடுதிகள் ஆகியவை போராட்டத்தில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 14, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News April 13, 2025

விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் சமுதாய நலனுக்காக பணியாற்றபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2025

ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை விவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டி உருளை கிழங்கை தினசரி பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. அதன்படி இன்றைய ஏலத்தில் ஒரு மூட்டை உருளை கிழங்கு முதல் ரகம் அதிகபட்சமாக ரூ.1230 க்கும், குறைந்தபட்சமாக ரூ.700 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 700 மூட்டை விற்றது.

error: Content is protected !!