News April 3, 2025
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News August 19, 2025
தூத்துக்குடி: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க… SHARE பண்ணுங்க..
News August 19, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 18, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக.21 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.